வரலாறு எழுதுகிறது அதிமுக வெற்றி

அதிமுக வெற்றி உறுதி ஆகி இருக்கிறது ...!!!!!

நபருக்கு "500" என்று வீட்டுக்கு "2000" ரூபாயை பூத் ஸ்லிப் உடன் வைத்து கொடுக்க தீவிரமாக வேலை பார்த்த அதிமுக கண்மணிகளுக்கு கிடைத்த வெற்றி இது ..!!!

இன்னும் ஐந்து ஆண்டுகள் என்ன என்ன நடக்குமோ என்ற வியப்புடனே பலர் இருகின்றனர் ..
இந்த நாள் முதல் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி செல்லும் ...
இந்த நாள் தமிழ்நாடு மக்கள் தங்களுக்கு தாங்களாகவே பில்லி சூனியம் வைத்து கொண்டது போல் ஆகும் ...!!!!

படித்த இளைஞர்கள் அதிகளவில் வாக்கு அளிக்காமல் இருந்ததன் விளைவே இந்த முடிவு ..

மக்கள் நல கூட்டணி என்று ஆரம்பித்து அதற்கு விஜயகாந்தை தலைமை தாங்க செய்து படிக்காத பாமரனை குழப்பிவிட்டு இந்த அம்மா உணவகம் கொண்டு வந்து சோறு போட்ட அந்த அம்மாவே போதும் என்று நினைத்துவிட்டார்கள் ...

பாவம் பாமர மக்கள் .. இன்னும் ஐந்து ஆண்டுகள் எப்படியோ ... !!!!

காலையில் ஜெயா டிவியில் ஜோதிடர் ஒருத்தர் சிம்ம ராசிக்கு வெற்றி வாய்ப்பு நிரம்ப இருக்கிறது என்று சொன்னார் ...

ஜோதிடம் பழித்துவிட்டது ..
அம்மா ஹாப்பி ,.அம்மாவின் தோழி ஹாப்பி ..அம்மாவின் பிள்ளைகள் ஹாப்பி........
ஆனால் மக்கள் ..??!!!!

இன்னும் ஐந்து ஆண்டுகள் நடத்தும் ஆட்சியில் தான் தெரியும் மக்கள் ஹப்பியா இல்லை வாக்கு அளித்த மக்களுக்கு தொப்பியா என்று ...!!!!!


(எனக்கு ஒரு சந்தேகம் ...

மக்கள் நல கூட்டணி < ========> "பி -டீம் தானோ ??!!!!!!!!! )

எழுதியவர் : அருண்வாலி (19-May-16, 12:49 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 212

மேலே