வெயில்

வீட்டின் முன் இருந்த
கிளைகளை கழித்து
விட்ட மறுநாள் காலை
விரைவாக வந்தது வெயில்.

வெட்டப்பட்ட
ஒரு மரத்தின் கதையை
சுவாரசியமின்றி
கேட்கிறது ஒரு பறவை !

ஒரு நூலிழை
வித்தியாசத்தில்
வெற்றிக் கோட்டை
தாண்டி விடுகிறது நம்பிக்கை !

கண்ணாடியில் பார்க்க
தெரிகிறது வித்தியாசம்
நேற்றுபோல் இல்லை
இன்று நான் !

எனது படுக்கையின் மேல்
பறந்து கொண்டிருக்கிறது
எப்போதும் ஒரு வல்லூறு
வீணாக !

மரணிக்கும் ..ஒவ்வொரு
இரவுக்கு பின்னும்
எழுந்துவிடுகிறது துள்ளி..
என்னுள் ஒரு வெள்ளைக் குதிரை!

அந்த அலைகளுக்கு
பிறகு வேறொன்று
எழும்பி வரவில்லை
கடலின் ஓவியத்தில்..!

நிசப்தமான நடுநிசியின்
அமைதியை குலைக்கிறது ..
அவள் வீட்டின்
ஜன்னலருகில் விழுந்த பூ !

எழுதியவர் : கருணா (19-May-16, 6:26 pm)
Tanglish : veyil
பார்வை : 218

மேலே