இயற்கை அழிவது

மரங்களை எல்லாம் வெட்டுகிறார்-வளம்
மண்ணில் இருப்பதை விரட்டுகிறார்.
இரக்கமே இல்லா மாந்தர்களால் –மனித
இனமது வதங்கித் தவிக்கிறது.

காடுகள் கூட அழிக்கின்றார்-மேகம்
கருத்துப் பெய்வதைத் தடுக்கின்றார்
நாடுகள் இதனால் நலிகிறது-பிற
நாட்டிடம் கையேந்தி நிற்கிறது.

வயல்களில் வீட்டினைக் கட்டுகிறார்-நெல்
விளைச்சலை அழித்து விழிக்கின்றார்
வறுமையைத் தேடி அணைக்கின்றார்-மண்
வரண்டு போவதை மறக்கின்றார்.

ஏரிகள் கழுத்தை நெறிக்கின்றார்-அவை
நிரம்பிக் கிடப்பதைக் கெடுக்கின்றார்
மாரிகள் நாட்டில் பெய்யாமல்-இம்
மானுடம் தவித்திட வைக்கின்றார்-

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (20-May-16, 8:55 pm)
Tanglish : iyarkai alivathu
பார்வை : 99

மேலே