குழந்தையின் குமுறல்

நான் கண்
திறக்கும் முன்னே
என்னை குப்பைத்தொட்டியில்
வைத்தாயே
நான் இந்த உலகிற்கு
வந்தது பாவமா?

கருவில் சுமக்க
சுகமாய் நினைத்தவள்
இன்று மடியில்
சுமக்க மறுக்கிறாள்...

வீதியிலே செல்பவர்களுக்கு
விளங்கவில்லை
நான் வீரிட்டு
அழும் குரல்
என் வாழ்கையில்
ஓயாமல் அடிக்கும்
வறுமையின் சாரல்...

என்னுடைய மொழியோ
யாருக்கும் புரியவில்லை
அவர்களின் மொழியோ
எனக்கு தெரியவில்லை..

பாசம் காட்ட
தந்தையும் இல்லை
பசி தீர்க்க
தாயும் இல்லை...
உறவுகள் யார்
என்று தெரியவில்லை
உதவிக்கு வர
யாருமில்லை..

என் பெயரோ
அநாதை
என் பற்றி அறியாதவர்களுக்கு
நான் ஒரு தொடர்கதை...

நான் உறங்கும்
போது என்னை
கருவறையில் வைத்து,
நான்
விழிக்கும்
போது என்னை
என்னை குப்பைதொட்டிக்கு
அனுப்பிவிட்டாயே?

எனக்கோ
முகவரி இல்லை
உன் முகவரியும்
எனக்கு தெரியவில்லை..

தாயே
விதி இருந்தால்
இந்த பிறவி
உன்னிடம்..இல்லையேல்
என் உயிரோ
அந்த இறைவனிடம்....

(வறுமையில் இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் குப்பைத் தொட்டியில் வைக்காதீர்கள்.....
எல்லோராலும் அன்னை தெரசாவாக முடியாது...ஆனால் அன்புள்ள அன்னையாக இருக்க முடியும்..)

எழுதியவர் : சபானா ஆஷிக் (21-May-16, 1:36 pm)
பார்வை : 117

மேலே