காதலின் வழக்கம்

வசிப்பிடத்தின் இருப்பிடம்
வாசனையில் நிறையுதா?
புயங்களின் புல்லரிப்பு (புயம்=arms)
புதிதாக தெரியுதா?

ஞானத்தின் உச்சநிலை
கவிதையாய் விழுகுதா?
ஞாபகத்தின் மோட்சநிலை
கன்னியென்று ஆகுதா?

கரங்களில் ரேகைகள்
காணமல் போகுதா?
கரங்களில் கன்னியவள்
காதல்தான் தெரியுதா?

அங்கங்கள் இடம்மாறும்
அதிசயம் உணருதா?
அடிக்கடி வரும்போகும்
அடைமழை பிடிக்குதா?

மரணத்தின் இறுதிநாளாய்
மனமின்று நினைக்குதா?
ஜனனத்தின் முதல்நாளாய்
மனமின்று அழுகுதா?

புவிகளின் புவியீர்ப்பை
உடலங்கள் ஜெயிக்குதா?
புற்களில் அடிப்பட்டு
உடலங்கள் தோற்குதா?

வஞ்சியவள் வருகையை
விழிகள்தான் அறியுதா?
வந்தாடும் கொலுசுகள்
வீணையாய் தெரியுதா?

இந்தநிலை எந்தநிலை
இஃதாவது அறியுதா?
இதற்கெல்லாங் காரணங்கள்
சொன்னவள் காதலா???

எழுதியவர் : (21-May-16, 1:40 pm)
பார்வை : 85

மேலே