பரிகாரம் தேடிடும்
சிந்திக்கும் திறனும்
சிந்தையில் தேய்ந்து
சீரழியும் சமுதாயம்
சீர்பெறும் நிலைதான்
இனியேனும் வருமென
இன்பமும் வழியுமென
இதயத்தில் இருந்தது
இடியாய் விழுந்தது
நடந்திட்ட நிகழ்வுகள்
நடைபிணம் ஆனது
நம்பிட்ட நெஞ்சங்கள்
நிச்சயம் மறுக்காது
நிந்தனை செய்யாது
வாசிக்கும் இதயங்கள்
யோசிக்கும் இதனை
பரிகசிக்கும் உள்ளங்கள்
பரிசீலனை செய்திடும்
பரிசுகள் பெற்றவை
பரிகாரம் தேடிடும் !
பழனி குமார்
21.05.2016