கடவுளே

வாதத்தை முடிப்பதற்குள்
பூதத்தை புரட்டிவிட்டார்கள்!
நாதத்தை இசைப்பதற்க்குள்
வேதத்தை விதைத்துவிட்டார்கள்!
சாதத்தை உண்பதற்குள்
மீதத்தை கொட்டிவிட்டார்கள்!
யாகத்தை வளர்ப்பதற்குள்
யோகத்தை கூட்டிவிட்டார்கள்!
கடவுளே - உன்
இரக்கத்திற்கு ஏன் - இவ்வளவு
இறக்கம்!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (21-May-16, 5:27 pm)
பார்வை : 151

மேலே