விரைவில் வருவேன்
சவத்திற்கு உயிருட்டி சலிப்பில்லாமல் சகலமும் செய்து சிரித்துக்கொண்டிருக்கிறாய்.
இடியாய் உள்ளிருந்து இடித்தபோழுதும் உனக்கு இனிமையாய் இருப்பது ஏனோ !!!
எல்லையில்லா உன் அன்பை இந்த பிள்ளையால் பிரித்துப்பார்க்க இயலாமல் போவது ஏனோ ??
கவலைகள் பல உன் மனதை தாக்கினாலும் அது ஏனோ சற்று கிழிறங்கி என்னிடம் வருவதேயில்லை.
இருளாக உள்ளிருந்தாலும்,நீ மெழுகாய் உருகிக்காட்டும் அன்பினால் எனக்குள் வெளிச்சம் வெளிக்காட்டுகிறது.
நீ பாடும் பாட்டை கேட்டுக்கொண்டே உறங்குகிறேன் நீ நிப்பாட்டும் வரை.உடனே வெளியேறவேண்டும் என்றுதான் ஆசை, உனக்கு வலியெருமெ என்று தான் எனக்கு பயம்..
தயங்கி நிற்கிறேன்.. விரைவில் வருவேன்...