காதலின் சந்திப்பு
அது ஒரு கார்காலம்
மலை மீது
மாலை நேர
மேகங்களின் ஊர்கோலம்
என் காதலியின் வரவை
கண்பூத்துக் காத்திருக்கின்றேன்
மேகமே சீக்கிரம்
மழையாக அவளை வர வை
இது மடல் மூலம்
பேசியது முற்றுகொண்டு
உடல் மூலம் பேசும் நேரம்
இந்தப் பேரழகியின்
பேர் கூட அழகி
அவள் கால்த்தடம் படும்
புற்கள் புற்களாய் முளைப்பதைவிட
பற்களாய் முளைக்கின்றன
அவளைக்கண்டு இளிப்பதற்கு
அழகைக் கண்டு களிப்பதற்கு
பூவைப்போல் பாவையும்
பூத்தவள்
எனக்காக பெற்றோரை
நீத்தவள்
தீவைப்போல் தனியாக
எனைப் பார்த்தவள்
பஞ்சோடு தீயைப்போல்
என் நெஞ்சோடு கரம் கோர்த்தவள்
அவள் ஆடை
அணிந்து நடந்துவரும் காடை
அவள் துள்ளாமல்
பணிந்துவரும் ஓடை
மயக்கமதை உமிழ்வதோ
அவள் விழி ஜாடை
தயக்கமது அறிவதில்லை
நான் படும் பாடை
அவளைச் சந்திக்கும்
மணித்துளிகள் குறைந்தது
அவளைச் சிந்திக்கும்
மனத்துளைகள் நிறைந்தது
இருவரும் சந்தித்தோம்
இனிமையை சிந்தித்தோம்