துறவல்

பணம் மீது ஆசை கொண்டு
குடும்ப பாசத்தை துறந்தாய்

சுயநலத்தை மேற்கொண்டு
உற்றார் உறவினரை மறந்தாய்

நவ நாகரீகத்தின் மீது மோகம் கொண்டு
வட்டிக்கு கடன் வாங்கியே
தினம் உன் மகிழ்சியை இழந்தாய்

நகரத்தின் மீது பற்று கொண்டு
சொந்த மண்ணை விட்டுவிட்டு
சுதந்திர காற்றை இழந்து
வாடகைக்கு குடில் புகுந்தாய்

விளம்பரத்தை கண்டு இரசித்து
அசலாய் இருந்த அறிவையும் இழ்ந்துவிட்டாய்

இறுக்கமாய் உன் மனதை வைத்துக் கொண்டு
கோமாளி தனத்தை தினம் விளைக்கு வாங்கும்
ஏமாளி மனிதா

ஒன்றை இழந்து மற்றொன்றை பெறுவதுதான் துறவா?
ஒருவரை ஏமாற்றுவதுதான் அறிவா?

மனிதனை மறந்து மனிதத்தை துறந்து
எதைத் தேடி ஓடுகிறாய்....
இயந்திரமாய் எந்நாளும்!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 11:03 am)
பார்வை : 61

மேலே