வாழ்க்கை என்பது

இன்பமும் துன்பமும்
உன் மனதை பொறுத்தது
வெற்றியும் தோல்வியும்
உன் செயலைப் பொறுத்தது
ஏற்றமும் இறக்கமும்
உன் மதியைப் பொறுத்தது
நேரமும் காலமும்
உன் எண்ணத்தைப் பொறுத்தது
காதலும் காமமும்
உன் பார்வையைப் பொறுத்தது
கூடலும் ஊடலும்
உன் தேவையைப் பொறுத்தது
வசதியும் வாய்ப்பும்
உன் தேடலைப் பொறுத்தது
ஈவும் மீதியும்
உன் திட்ட வகுத்தலைப் பொறுத்தது
நிரந்திரம் இல்லா உலகில்
முடிவு என்பது உனக்கு சொந்தமானது

ஆசைகள் உன்னை துரத்தினால்
அதுவோ துன்பம்
ஆசைகளை நீ துரத்தினால்
அதுதானே உனக்கு இன்பம்

கடந்து வந்த பாதையை
மறந்தவன் மனிதனில்லை

மனிதனுக்கிடையில் நிலவுகின்ற
சண்டைகள் யாவும்
அறியாமையினாலும்
ஆசைகளாலும் ஏற்பட்டதே தவிர
அறிவுகளால் தோன்றியதல்ல

உடும்புப்பிடி தேவைதான்
அதற்காக கொள்கையில்
மாற்றம் இல்லையென்றால்
புதுமை எனும் வளர்ச்சி
காணாமல் போகும்

நீயா நானா என
தினம் மோதுவதில் இல்லை சுகம்

நீயும் நானும் கருத்தொத்து
ஒன்றுகூடுவதில்தான்
எத்தனை சுகம்!

உன்னையும் என்னையும் ஒன்றுபடுத்திய
காதலுக்கு உள்ள வலிமை
நீயா நானா என
எடைபோட்டுப் பார்க்கும்
சாதி மதத்திற்கு உண்டா சொல்?

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 1:38 pm)
Tanglish : vaazhkkai enbathu
பார்வை : 554

மேலே