வெற்றியின் சோதனை
கீழைக்கடலில் காலைச் சூரியன்
விழித்து எழுவது போல்...
உன்னைச் சூழ்ந்திருக்கும்
இருள் திரையைக் கிழித்து
வெளியே ஓடிவா என்னிளம் தோழா
உனக்காகத்தான் காத்திருக்கிறது
இந்த பூலோகம்
நீ உலா போகும் பாதையில்
பல மேடு பள்ளங்கள் நிறைந்திருக்கும்
அந்த தடைகளை கடந்து
துணிந்து தாண்டிச் செல்வதுதான்
வெற்றி பயணம்
முயற்சியின் முதல் படியில்
தடுக்கி நீ விழுந்தாலும்
அதை ஒரு தடையாக கருதாதே
ஏனெனில் அதுதான் உன்
வெற்றியின் சோதனை
அதை எதிர்த்து எழுந்தால்
நீயும் பெறுவாய் பல சாதனை!