குவளை மலர்

குவளை மலர்
*****************
தேவை தினம் உன் பார்வை
நீ சேவை செய்யும் பாவை

நீ சிந்தும் சொற்கள் தேன் எனினும்
என்னை தினம் மயக்குவது
உந்தன் கள்ளப்பார்வைதான்

ஆதலால் தேவை உந்தன் பார்வை

என்னைக் கண்டால் நீயும்
உன்னைக் கண்டால் குவளையும்
நாணுவதேன்?

அழகே!
உன்னால் ஆசைதான் கூடுதடி
நெற்கதிரே!
நீதான் தலை சாய்ந்தது போதும்
முல்லைக் கொடியாய்...
என் நெஞ்சில் பற்றி
நீ படர்ந்திட வேண்டும்

உந்தன் சேவை
எந்நாளும் எனக்கு தேவை

ஆதலால்... அன்பே!
நாணாதே! - என் முன்பே!!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 4:14 pm)
Tanglish : kuvalai malar
பார்வை : 235

மேலே