குடிமகன்களின் போதை குறையவில்லை

மது விலக்கு தமிழகத்தில்

படிப்படியாய் நிகழும்

கடை திறப்பின் நேரமாற்றம்

மாற்றத்திற்கான முதல்படி

ஐநூறு கடை குறைப்பு

மாற்றத்திற்கான இரண்டாம் படி

ஆனாலும்…….

மதுக் கடைகளின் படிகளில்

கூட்டம் குறையவில்லை

மது விற்பனை குறையவில்லை

குடிமகன்களின் போதை குறையவில்லை

படிப்படியாய் மது மயக்கம் குறையும் போது

மறுபடியும் மதுக்கடை நோக்கி

படையெடுப்பு தொடர்கின்றது

இந் நிலை மாறிட

மதுவுக்கெதிரான சிகிச்சை முகாம்கள்

குடிப்போருக்கான மறுவாழ்வு மையங்கள்

விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

படிப்படியாய் அரங்கேற வேண்டும்.

எழுதியவர் : மோகனதாஸ் (25-May-16, 7:46 pm)
பார்வை : 278

மேலே