தினம் ஒரு காதல் தாலாட்டு தனிமை - 56 = 116

"கனவு கண்டேன், கனவு கண்டேன்
பகலினோர் கனவு கண்டேன்
கனவினிலே வந்தது யாரென்று
நானிங்கு சொல்லுகின்றேன்.."

ஆகாய சூரியனாய் அழகாய் இருந்தாரு
அரிதாரம் பூசாத நிலவாய் தெரிந்தாரு
ஆங்காங்கே விண்மீனாய் கண்ணில் பட்டாரு
அடர்ந்த மேகமாய் அணிதிரண்டு வந்தாரு

விழியிரண்டும் வேலாய் மேனியில் பாய
விழியிருந்தும் அந்நேரம் குருடாய் ஆனேன்
விழித்துக்கொண்ட அவர் ஆறுதல் கூற
அனைத்துக்கொண்டேன் நான் அகம் மகிழ..

கனவு கண்டேன், கனவு கண்டேன்
பகலினோர் கனவு கண்டேன்
கனவினிலே வந்தது யாரென்று
நானிங்கு சொல்லுகின்றேன்..


முக்குளித்து முத்தெடுத்து மொத்தமாய் தந்தாரு
முத்த மழை காட்டுக்குள் முழுதாய் நனைய விட்டாரு
ராஜாதி ராஜனாய் ராஜநடை போட்டரு – அவர்
ராட்ஜியத்தில் எனக்கொரு ராஜ விருந்து அளித்தாரு..

உள்ளத்தில் அவர் தங்கமடி
உருவத்தில் அவர் வைரமடி
விவேகத்தில் அவர் கண்ணனடி
வீரத்தில் அவர் கம்ப ராமனடி

இன்னும் என்னென்ன நான் சொல்ல
எப்படியெல்லாம் நான் சொல்ல
கனவில் வந்தவரை கைபிடிக்காமல்
கன்னி நான் ஓயப் போவதில்லை…

கனவு கண்டேன், கனவு கண்டேன்
பகலினோர் கனவு கண்டேன்
கனவினிலே வந்தது யாரென்று
நானிங்கு சொல்லுகின்றேன்..

எழுதியவர் : சாய்மாறன் (26-May-16, 5:04 pm)
பார்வை : 67

மேலே