உனக்கும் உண்டு சிறகுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
எந்த பறவைகளும்
உனக்கு
பறக்கக் கற்றுக்கொடுக்க
அவசியமில்லை.....
இருக்கிறது உனக்குள்
பலநூறு தன்னம்பிக்கை
சிறகுகள்......
முதலில்
விரித்துப் பறக்கும்
எண்ணத்தை உன்னில் விதை.
வானம் மட்டுமல்ல
அதையும் தாண்டி
பலவும்
உன் இறகு கடக்கும்
அண்டங்களாகலாம்.
ஒன்று மட்டும் புரிந்துகொள்
பறப்பது வானமாக
இருந்தாலும்
பூமிதான் உன் தரையென்பதை
கர்வத்தில் மறந்துவிடாதே..
வெற்றிப் பர்வதங்கள்
பல கடந்து
உயரப் பறக்க நினைப்பதில்
தவறில்லை.
உன் தன்னம்பிக்கை சிறகுகளை
பறக்க விரிக்குமுன்
சகுனம்,சம்பிரதாயம்
என்று சொல்லித் தடுப்போரை
தூரவிலக்கிவை
உன் வெற்றியால்...
மூட நம்பிக்கை
சுழற்காற்றை
முழுவலிமை சிறகசைப்பில்
அடித்து நொறுக்கு....
உலகம் உன் வசமாகும்.
உயரப் பறக்க
இன்னும் பலசிறகுகளும்
முளைக்கக் கூடும்.
தன்னம்பிக்கையில்
நம்பிக்கை வை.
இன்றும் நாளையும்
ஏன்
எதிர்வரும் தினமெல்லாம்
இனி உனதாக மலரும்...!