மனதின் மெல்லிய சலனங்களில்
சிரிக்கும் பளிங்குச் சிலை நீ
செவிதழ் திறக்கும் செந்தமிழ் புத்தகம் நீ
விழிகளில் கவியும் அந்தி வானம் நீ
மலர்களில் உலவும் தென்றல் நீ
மார்கழிப் பனியின் குளிர்ச்சி நீ
மன்மதன் எய்த மலர்க் கணை நீ
இடையில் குறுகிய திருக்குறள் நீ
இளவேனில் ஏந்தி வரும் பருவம் நீ
கோடையில் பெருகும் குளிரோடை நீ
சாரலில் சாயந்திர சாத்திரம் ஓதும் வேதம் நீ
புன்னகையில் புரட்சிக் காரி நீ
பூ மலர்களை புறமுதுகு காட்ட ஒட்டிடும் எழில் அரசி நீ
வானத்து தேவதையரும் வரிசையில் வந்து பார்க்கும் பூமித்தேவதை நீ
மனதின் மெல்லிய சலனங்களில் நான் எழுதும் கவிதை நீ
மௌன விழிகளில் இதழ்களில் பேசும் காதல் நீ !
-----கவின் சாரலன்