வருந்தலாம்

எனது நண்பர் ஒருவர்
ரயிலில் பயணம்
செய்து கொண்டே
படித்துக் கொண்டிருக்கிறார்
நேரத்தைக் கடத்த..


அதே ரயிலில் ..
தனக்குத் தெரிந்த ..
தெரியாத ..
புரிந்த ..
புரியாத ..
ஏதேதோ இசங்களை
சொல்லியபடி ..
தன் தோழிகளின்
உயிரையும் ..
நேரத்தையும்
கடத்திக் கொண்டிருக்கிறாள்
ஒரு புரட்சிப் பெண் ..


காத்துக் கிடக்கிறது
அடுத்த கிராமத்து
ரயில் நிலையம் ..
ஒரு நாளைக்கு ஒரு முறை
மட்டுமே கிடைக்கும்
மனித சந்தடிக்காக..

தனது கூரிய நகங்களால்
எரிச்சலில்
தரை கீறிக்கொண்டிருக்கிறது
பசியோடு
திரிந்து கொண்டிருக்கும்
ஒரு குரங்கு !


இரவு ..
வெகு சிரத்தையோடு
தன்னை
அலங்கரித்துக் கொள்ள
ஆரம்பிக்கிறது
நிலாவைக் கொண்டு..


எல்லாம் ..
எல்லாம்..
எல்லாமே ..
எதையோ எதிர்பார்த்து
நேரத்தை சிரமப்பட்டு
நகர்த்திக் கொண்டிருக்கும்
இந்நேரத்தை..
கவிதையொன்று எழுதி
கடத்தி விடுகிறேன்
நானும் ..


என்ன செய்வது ..
என்று நீங்களும் படித்து விட்டு
வருந்தலாம் ..
ஒரு வேளை..!

எழுதியவர் : கருணா (29-May-16, 11:28 am)
பார்வை : 565

மேலே