தீபத்தின் ஒளியில்

தம் இல்லத்து பொருளா தாரத்தை மனதில் கொண்டு; சூரியவொளியில்; நிலவொளியில் சீமையெண்ணை விளக்கொளியில்;
மெழுகுவர்த்தியொளியில் மற்றும் தெருவிளக் கொளியில்; உட்கார்ந்து
கண்ணயராது கருத்தாக கல்வி பயின்று விட்டு
நாட்டினை ஆண்டவரும்
இங்கே இல்லாமல் இல்லை

இன்றைய சூழ்நிலையில் மின்சார ஒளியில்
கல்வி பயின்று விட்டு தன்நாட்டை தானாள முன் வந்தாரில்லையே எனும் ஆதங்கம் நிறைய பேர்க்கு இல்லாமல் இல்லை

சிந்தித்து பார்க்கையில் நெஞ்சி பதையாய் பதைக்கிறது சதையும் துடியாய் துடிக்கிறது வதையாய் வதைகிறது

துடிப்பற்ற சடலம் கோடிக் கோடியான நாடி நரம்புகள்
ஈரமற்று கோடையில் காய்ந்து கிடக்கும் புற்களைப் போலல்லவா கிடக்கிறார் கற்றாரும்••!

ஆற்றில் ஓடும் நீரை ஆடு குடித்தால் என்ன இடையன் குடித்தால் நமக்கென்ன என்றா••?

இயல் அமைதிகாப்பதால்
இசையும் நாடகமும் தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பதினால்
தமிழ் நாடு இருண்டு காணப்படுகிறது " தீபத்தின் ஒளியில்" திகழப்போகும் நாள் வெகு துலைவில் இல்லை என்று மட்டும் தெளிவாக தெறிகிறது

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி/ மும (29-May-16, 6:46 pm)
பார்வை : 56

மேலே