காதல்

காதல் ............................................................................................

என் கண்களில் விழுந்த எழிலே !
சுதந்திரமாய் திரிந்த என்னை
பறவையின் சிறகை பிடித்து
ஓடித்ததுபோல் !

காதலின் சிறைக்குள்
வைத்து என்னை
ஆசை தீர இரசிக்கும்
பெண்ணே !

காதல் என்பது
பலமா !
இல்லை
பாலமா !

என் நெஞ்சை குத்திய முள்ளே !
என் கேள்விக்கு பதில் சொல் .

பார்பதற்கு அழகுதான்
ரோஜா !
இரசித்துப்பர்க்கலாம்
ஆனால்
அதை பறிக்க நினைத்தால்

எந்த ராஜாவையும் அது
குத்தத்தான் செய்யும்
காதலும் அப்படித்தான் !

அன்புள்ளவரை
இனிக்கும் !
ஆசை கொண்டால்
தவிக்கும் !
புரிய மறுத்தால்
கசக்கும் !
பிரிய நேர்ந்தால்
வலிக்கும் !

கடலில் வந்து கலந்து விட்டால் !
நதி நீர் எப்படி இனிக்கும் !

எண்ணங்களின் வண்ணங்கள்தான் வாழ்க்கை!
நினைவுகளின் அதிர்வுகள் தான் காதல் !

மணமாகமலே வாழ்ந்து பார்க்கும்
இதயத்தின் வலிதான் காதல் !
இறப்பதற்கு முன்னாலே இறக்காது
உண்மை காதல் !

பார்த்தாலே சுகம் தரும்
பக்கம் வந்தாலே பலம் தரும்
கண்டு சிரித்தாள் இதம் பெரும்
அன்பை மறுத்தால் ரணம் பெரும் !

பலமான அந்த வலி பிரியும் வரை தெரியாது !
கருத்து ஒத்துப் போனால் ...................................
காதலிப்பாய் ஒவ்வொரு நொடியையும் !

இணைந்தே இருக்க நினைக்கும் !
சிறிது பிரிந்தால் உயிர்
இருக்க மறுக்கும் !
இறந்தாலும் இருவரும் இணைந்து இறக்கவே விரும்பும் !
காலம் எத்தனை ஆனாலும் காத்திருக்கக் கூடும் !

சொன்ன நேரம் சிறிது தவறினாலோ !
சிந்தை படும் பாடு !
பித்தனாக்கக் கூடும் !

வாழ்க்கை அழகாகும் !
உவமை நிஜமாகும் !
கற்பனை ஊற்றெடுக்கும் !
ஆறு கடலாகும் !
கடல் சிறு நதியாகும் !

கெட்டவன் நல்லவனாவான் !
முட்டாளும் வின்ஜாநியாவான் !
மனிதனும் புனிதனாவான் !

மாற்றம் தரும் காதல்
தேவைதான் !
ஒவொவொரு உயிர்க்கும்
காதலித்துப்பார் !

உலகத்தின் வழியும்
உள்ளத்தின் வலியும்
உணர்வாய்
வாழ்க்கையில்
உயர்வாய்.!

அன்புடன்
ராமன்மகேந்திரன்

எழுதியவர் : RAMANMAHENDIRAN (30-May-16, 12:05 pm)
Tanglish : kaadhal
பார்வை : 115

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே