ஒருவரை ஒருவர்
ஒருவரை ஒருவர் கடந்து வந்தோம்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்
ஒருவரை ஒருவர் பழகிக் கொண்டோம்
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்
ஒருவருக் கொருவர் காதல் சொன்னோம்
ஒருவரை ஒருவர் மணந்து கொண்டோம்
ஒருவரில் ஒருவர் சண்டை இட்டோம்
ஒருவரில் ஒருவர் வாதம் செய்தோம்
ஒருவரில் ஒருவர் கோபம் கொண்டோம்
ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டோம்
ஒருவரை ஒருவர் விலகி நின்றோம்
ஒருவரை ஒருவர் பிரிந்து சென்றோம்
ஒருவரை ஒருவர் மறந்து விட்டோம்
நமக்குள் பிறந்த காதல் இன்று தனியே..
அதன் முகத்திற்கு நாம் பூசிவிட்டோம் கரியே...