இன்று கூட கண்ணீருண்டு

கத்துக்கிட ஆசைப்பட்டு
வீட்டுலதான் அடம்பிடிச்சு
ரெண்டுரூபாய் வாங்கிகிட்டு
ஓடியோடிகடைக்கு போவோம்..

அரைமணியா காத்திருந்து
வாடகைவண்டி வந்தவுடன்
ஒருமணிக்கு காசுகட்டி
வண்டிஎடுத்து பறந்திடுவோம்..

தெருவுக்குள்ளே போகும்போதே
ராஜாபோல ஓட்டிடுவோம்
காடுவரை ஓட்டியோட்டி
கால்வலிய மறந்திடுவோம்..

நேரமது ஆகஆக‌
சோகமுகம் கொண்டிடுவோம்
மாமாகிட்ட கதையச்சொல்லி
ரெண்டுரூபாய் வாங்கிடுவோம்..

வீரன்போல கடைக்குபோயி
இன்னுமொருமணிநேரம் என்றிடுவோம்
காத்திருக்கும் சிறுவன்பதற‌
புயலாய்கிளம்பி வந்திடுவோம்..

காசுகிடைக்கா நாட்களெல்லாம்
அப்பாவோட பெரியவண்டி
குரங்குபெடல போட்டுக்கிட்டு
தெருவில்சறுக்கி விழுந்திடுவோம்..

போருக்கென்றும் போனதில்ல‌
விழுப்புண்நூற்றுக் கணக்கிலுண்டு
அந்தக்காயத்தழும்பக் கண்டு
இன்றுகூட கண்ணீருண்டு..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Jun-16, 7:28 pm)
பார்வை : 1848

மேலே