தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா

அண்ணல் காந்தி ஆசைப்படி
அனைவருமே இணைந்திடுவோம்
ஆணையிட்ட அரசுப்படி
ஆசையாக இணைந்திடுவோம்
இணைந்தே ஒன்றாய் செயல்படுவோம்
தூய்மையான இந்தியாவிற்கே
கழிப்பிடவசதி பயன்படுத்தி
களிப்பான வாழ்கை வாழ்ந்திடுவோம்
குப்பை தொட்டி பயன்படுத்தி
குதூகல வாழ்கை வாழ்ந்திடுவோம்
எச்சில் ஆங்காங்கே துப்பாமல்
எட்டா உயரம் சென்றிடுவோம்
தூய்மையான இந்தியாவிற்கே
துடிப்புடனே செயல்படுவோம்

எழுதியவர் : சே.மகேந்திரன் (8-Jun-16, 8:32 pm)
பார்வை : 109

மேலே