காலமும் தூரமும்

காலமும் தூரமும்.

கணித வினாத்தாள் கையில் எடுத்து
கடகட வென்று படித்துப் பார்த்து
காலமும் தூரமும் என்ற தலைப்பில்
வந்த கணக்கைச் செய்யாமல் வேர்த்து

தேறுமோ இந்தத் தேர்வென விழித்து
முடிவுகள் வருவதைப் பார்த்து இருப்போம்
தேர்வுகள் இங்கு ஆயிரம் எழுதலாம்
காலமும் தூரமும் கையும் கொடுக்கலாம்..

வெள்ளத்தில் மீன்கள் எறும்புக் கூட்டத்தை
அள்ளி அப்படியே வாயினில் விழுங்கும்
பள்ளத்து நீரது வடிந்த பின்னரோ
எறும்புகள் மீன்களை இழுத்துச் செல்லும்

நாடக அரங்கினில் முதல் வரிசையில்
நாம் எல்லோரும் காத்து இருப்போம்
வெள்ளித் திரை அரங்குக்கு உள்ளே
இறுதி வரிசையில் இடமதைப் பிடிப்போம்

காலமும் தூரமும் யாருக்கும் பொதுவாம்
ஞாலம் சொல்லிடும் சுற்றியே மெதுவாய்
காலம் எதையும் காத்திருந்து வெல்லும்
தூரம் இருப்பினும் சடுதியில் கொல்லும்

சோப்பு செய்திட எண்ணெய் வேண்டும்
எண்ணெய் போக்கிட சோப்பது வேண்டும்
ஏப்ப சாப்பையாய் மனிதர் இருப்பினும்
ஒருவரை ஒருவர் சார்ந்திட வேண்டும்.

காலமும் தூரமும் இணையாய் நகரும்
வாலாய வாழ்வில் வயதது கூடிடும்
ஞானம் பெற்று வாழ்க்கை வாழ்ந்திட
காலமும் தூரமும் கைவசம் ஆகிடும்

உலகில் இருவர்க்கு மட்டுமே மகிழ்ச்சி
ஒன்று குழந்தை அடுத்தது பயித்தியம்
குறிக்கோள் அடைந்திட பயித்தியம் ஆகலாம்
அடைந்ததைக் கொண்டாட குழந்தை ஆகலாம்

ஜே.ஜே..

எழுதியவர் : தா, ஜோ .ஜூலியஸ் (17-Jun-16, 2:44 pm)
Tanglish : kaalamum thooramum
பார்வை : 81

மேலே