ஊரை தெரிஞ்சிக்கிட்டோம்

ஒரு அதட்டல்
ஒரு மிரட்டல்
இல்லாத பெற்றோர் அன்பை
பெறறுக்கொண்டுவிட்டு;
அடித்தல் உதைத்தல்
இல்லாத உடன்பிறப்புக்களின் அன்பை
பெற்றுக்கொண்டுவிட்டு;
சுடுச்சொல் புறச்சொல்
இல்லாத உறவுகள் அன்பை
பெற்றுக்கொண்டுவிட்டு;
கணவன் அன்பில் வாழவந்த ஒரு மங்கை
எதிர்பாராத கட்டுப்பாட்டுக்குள்ளே
வாழ்வது கடினம்தான்;
தொட்டால் குற்றம் தொடாது
போனால் குற்றம்;
செய்தால் குற்றம் செய்யாது
போனால் குற்றம்;
நடந்தால் குற்றம் அமர்ந்தால் குற்றம்;
பேசினால் குற்றம் பேசாதிருந்தால் குற்றம்;
பார்த்தால் குற்றம் பார்க்காது போனால் குற்றம்
அம்மாடி போதுமடா சாமி;
இதுதான் வாழ்க்கையா என்று சலித்துக் கொள்ள வைத்து விடுகிறது;
இங்கிருந்தே ஒரு பூ பூநாகமாய் படம்விரித்து ஊதுகிற மகுடிக்கு மாறாக
ஆடத்துவங்கிவிடுகிறது
நம்ப குடும்ப மானம் சந்தி
சிரிக்கவாகிவிடுமோ வென்று அச்சம் அடக்கி வைக்கிறது அவனை
பிறந்த வீட்டிற்கும்
புகுந்த வீட்டிற்கும்
உள்ள வித்தியாசம்
ஒப்பிட்டுப் பார்க்கையில்
மனக்கசப்பு உருவெடுக்கிறது
வாக்கு வாதங்கள் வலுப்பெறுகிறது
பிரிவுவரை வந்துவிடுகிறது
அது கச்சேரிவரை ஏறி இறங்க வைத்துவிடுகிறது
அதற்குப்பின் சேர்ந்து வாழ்வது என்பது ஒரு மனக்குரோதத்தோடு தான் இருக்குமேயன்றி மறந்து வாழும் சக்தி இருக்க வாய்ப்பில்லை
கேவலம் ஒரு பொட்டச்சி ஆம்பளை என்னை எதிர்த்துப் பேசுவதா என்று தன்னைத்தானே உயர்த்திக்கொள்கிறவன் ஒரு புஸ்வானமாகத்தான் இருக்கவேண்டும்
அதேபோல் கேவலம் ஒரு ஆம்பள என்று சொல்லக்கூடாதா என்ன
கீரியைப் பார்த்த பாம்பைப்போலவும் பாப்பைப் பார்த்த கீரிப்பிள்ளையைப் போலவும் தான் இங்கே இரண்டுபேர் போர்களம்
அதனிலும் சேராதிருத்தலே நலம் பயக்கும் அதற்கு சட்டம் சம்மதிப்பதில்லை ஆனால் ஒருவருக்கொருவர் பழிவாங்கிக்கொள்ளும் நிலையாகவே இருக்கும் அதைப்பற்றி சட்டத்திற்கு கவலையில்லை
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டப்பின்பு சட்டம் அங்கே தலையை நுழைக்கிறது
சட்டத்தின் கணிப்பு நாள்பட நாள்பட கசப்பு இனிப்பாகிவிடும் என்பதாயிருக்கலாம்
பிரச்சினை விவாகரத்துவரை வந்துவிட்டது ஆனாலும் முடிவுக்கு வரவில்லை
இருவரும் வெவ்வேறு இடங்களை தனித்தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்
பருஷன் மனைவி கண்ணில் படும்படி வேறு ஒருத்தியோடு தோளில் கை போட்டு ரூமுக்கு அழைத்து வருவது கும்மாளம் அடிப்பதுமாக இருந்தான்
மனைவியும் சும்மா இல்லை அவன் கண்ணில் படுகிற மாதிரி நடக்கலானாள்
குடியிருப்போருக்கு விஷயம் தெறிந்து காவல் துறைக்கு ப்ராது செய்தார்கள்
அங்கே நடத்தைக்கெட்டவள் என்ற அவார்டு கிடைத்து அவனுக்கு பொம்பளை பொருக்கி என்ற அவார்டும் கிடைத்தது
என்ன உலகமடா இது சுயமாக ஒரு முடிவெடுக்கும் உரிமையைக்கூட பறித்துக்கொள்ளும் உலகமடா
தன்னிச்சையாய் வாழக்கூட வழிவிடாத உலகம் என்று இருவருமே
வருந்தலாயினர்
இனி இது நமக்கு சரிப்பட்டு வராது சேர்ந்துதான் வாழ்க்கையை துவக்கித்தான் பார்ப்போமே என்ற முடிவுக்குள் நுழைந்தனர்
ஈகோ ஒன்று குறுக்கே நிற்கிறது அதை சரிசெய்துவிட்டது முதல் இரவு சம்பவம்
கற்பமாய் இருப்பது தெறியவந்தது
சாதகமாகி இணைக்க வைத்தது இருவரையும்
இப்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டுப்போக அமைதி நிலவியது
இப்போதைக்கு அல்ல இனி எப்போதைக்கும் கீரியும் பாம்பும் நண்பர்கள் ஆவது சாத்தியமோ இல்லையோ இவ்விருவரும் ஊரைத்தெரிஞ்சிக்கிட்டு உலகம் தெரிஞ்சிக்கிட்டு அதற்கு தகுந்தார் போல் வாழலாயினர்