ஆறுதல்

விதவைக் கோலத்திலிருக்கும்,
இலையுதிர்ந்த மொட்டை மரத்திற்கு!
வண்ணப்பொட்டிடும் சிட்டுக்குருவி
ஆறுதல்!!!

வற்றியகுளத்தின் வெடிப்புப்படலங்களின்...
மீது! பாதங்களால் ஓவியம் தீட்டும்...
ஒற்றைநாரை குளத்திற்கு...
ஆறுதல்!!!

இருளெனும் கள்ளச்சிறையின் பிடியில்...
குடியமர்ந்த நடுநிசிக்கு!
ஒளிஆதாரமிடும் ஒற்றை நிலவு!
ஆறுதல்!!!

கருநீல கார்மேகப் பேய்கள் கழுத்தைநெரிக்க...
துயிலிழந்து துடிக்கும் நிலவுக்கு!
ஊளைராகமிட்டு நிலவை உறங்கவைக்கும்...
தெருநாய்கள் ஆறுதல்!!!

சேறும்! சகதியும் கதகதக்க! துர்நாற்றத்தில்...
அனுதினமும் துயில்கொள்ளும் குப்பைத்தொட்டிக்கு!
வாடிவதங்கி! வாழாவெட்டியான மலர்களின்...
வருகை ஆறுதல்!!!

கோடைப்பருவத்தின் கோரத்தாண்டவத்தால்!
விசும்பி கண்ணீர் கோலமிடும் மலர்களுக்கு!
வசந்தசோலை வாக்குறுதியளித்து...
சொற்பொழிவாற்றும் இரவுப்பனித்துளிகள்
ஆறுதல்!!!

கரையும்! காக்கையின் இரைச்சலுக்கு இசைந்து...
மடிந்த இலைகளுக்கு!
குழலோசைஎன பொழியும் குயில்ப்பாட்டு ...
ஆறுதல்!!!

கருமையை உடமையாய் பெற்றதனால்...
இட்டகண்னெல்லாம் வசைகல் தூற்ற!
கவலை வேரூன்றிய காக்கைக்கு!
குழழிசைகுரலால்! குறைகளை தென்றலில்...
புதைத்துவிடும் குயிலினங்கள் ஆறுதல்!!!

கனரக வாகன சக்கரத்தின் கோரப்பற்களும்!
காலணியின் கோரப்பற்களும்! கடித்துக்குதறிய...
மயக்கத்தில் வீழ்ந்திருக்கும் புவிபடலத்திற்கு!
தென்றலோடு மல்யுத்தம் புரிந்து!
மடிந்து புவியை ஸ்பரிசமிடும்...
உதிர்ந்த மலர்கள் ஆறுதல்!!!

நீ! நானென! முண்டியடித்து தொய்வின்றி...
ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரமுட்களுக்கு!
தன்னுயிரை மறித்து ஓய்வளிக்கும்...
மின்கலம்(பேட்டரி) ஆறுதல்!!!

வறண்ட நெஞ்சில் வளமையான வரிகளும்!
இனிமையான கவிகளும் தேடும் கவிஞன்க்கு!
விழிப்பட்ட இடமெல்லாம் கவிவெள்ளி உருகி...
வளமைகள் பட்டு ஒளிரும்...
இயற்கை ஆறுதல்!!!

இவ்வாறு,
ஒன்றுக்கொன்று ஆறுதல்
அளிக்கும் இவ்வுலகத்தில்!

மனஊனமடைந்த மங்கையவளிடம்!
மன்றாடி, மடிந்து!
உறவுப்பிச்சை கேட்ட
என் மனமோ!

முள்ளின்முனையில் சிக்கிய
பூவிதழ்களைப்போல!
தூண்டிலில் சிக்குண்ட..
புளுக்களைப்போல!
கொதித்த எண்ணெய்குமிழ்கள்...
விழிகளில் படர்வதைப்போல!
கத்தியின் முனைக்கு கழுத்தை...
தானமிட்ட ஆடுகளைப்போல!
தகதகக்கும் தீக்கனலைத் தழுவும்,
நீர்த்திவளைகளைப்போல!

வெப்பச்சலன ஊற்றெடுத்த...
மணற்படுகையில் விழுந்து!
துள்ளிக்குதித்து! மரணவலியை...
இதயத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம்...
அள்ளித்தெளித்து!
அனையத்துடிக்கிறது...
ஓர் அன்பின் பேரொளி!

அன்பிற்கினியவளின் ஆதரவின்றி!!!

இரக்கமில்லாத இதயக்காரி இவளென்று!
உரக்க சொல்வேன் ஊரெங்கும்!!!

எழுதியவர் : Maniaraa (21-Jun-16, 1:08 am)
பார்வை : 2713

மேலே