கதை சொல்லும் கலை

சிலை சொல்லும் கதை எமக்கு
மனிதன் கடந்து வந்த பாதைகளை
மன்னன் ஆண்ட தேசமும்
மந்திரி தந்திட்ட ஆலோசனையும்
அந்தப்புரங்களின் ரகசியங்களும்
ஓலைச் சுவடிகளின் பரிமாறலும்
கல்வெட்டுக்களின் அழுத்தங்களும்
இந்த சிலை அழகில் கலை நயத்தில்
நம் முன்னோர்கள் நம்மவர்க்கு
கற்றிட தந்து சென்ற அழியாத பொக்கிஷங்களே
கதை வாழக் கலை உண்டு
நிலையான உணர்வு உண்டு
உண்மைதனை உரைத்திடும்
உன்னத கலை இந்த சிலை தருதே
நாம் அறியாக் காலத்தில்
நாகரீகம் தோன்றும் முன்னே
நல்லதொரு கலைப் படைப்பாய்
அழித்ததிந்த அழியாத கலையே
அன்றய சரித்திரங்கள் பொன்னாலே
பொறிக்கப் பட்டது என்றால் மிகை ஆகாது
அதற்கு சான்றுகள் சொல்ல
இந்தக் கலையாகும் சிலையே சான்று
வளர்க கலை வாழ்க உண்மைகள்

எழுதியவர் : பாத்திமாமலர் (23-Jun-16, 8:24 am)
Tanglish : kathai sollum kalai
பார்வை : 60

மேலே