உன்னை உயிராய் காதலிக்கிறேன் பெண்ணே
என் கவிதைக்கு உயிர் கொடுத்து
என்னை உன்னுள் ஏற்றுக்கொண்டு
நிதமும் உன் முகம் பார்க்கவைத்து
முத்தமாரி சப்தமாய் பெய்ய வைத்து.......
என் உயிரின் உயிராக இருப்பவளே...
நீ பிறந்ததால் என் வாழ்க்கை
இன்றும் வசந்தம்..
என்றும் வசந்தம்....
விந்தை என்னவென்றால்.....
என் மனசை நீ திருடி விட்டு
என்னை சிறைவாசம் செய்தவள் நீ....
உன் அடிமையாக இருப்பதிலும்
புதுசுகம் காண்பவன் நான்..........
இன்று காலையில் பூத்த
என் எழில்மிகு ரோஜாவே........
உன் பிறந்த நாள் என் காதல் நாள்..
நான் காதலை உணர பிறந்த நாள்....
வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை..
உன் கரங்களை பற்றி.....என்னோடு இனைத்து
உன் நெற்றியில் முத்தமிட்டு உன் காதில்
கிசு கிசுக்கிறேன்....."உன்னை உயிராய் காதலிக்கிறேன் பெண்ணே…”