உண்மையான காதல்
நானும் நீயும் நட்புடன் இருக்கும் வரையில்
இல்லை நமக்கு(ள்) தொல்லை!
இன்று நீயும் நானும்
காதலர்களாய் மாறியதால்
எதற்கு இத்தனைத் தொல்லை?
நாளை நானும் நீயும்
கணவன் மனைவியாய் ஆனால்
ஏற்படுமா தொல்லை?!
எந்த பெற்றோரும்
காதலர்களைப் போற்றுவதில்லை!
காரணம் காதலர்கள் பலர்
உண்மையாய் இருப்பதில்லை
இருந்தால் அந்தக் காதலுக்கு
தோல்வி இல்லை!