எது நிரந்தரம்

வந்த வழியும்
தெரியவில்லை !
போகும் பாதையும்
தெரியவில்லை !
நடுவில் நடப்பதும்
புரியவில்லை !

வருகையின் காரணமும்
தெரியவில்லை !
வந்த பின்
நடப்பதின் காரணமும்
தெரியவில்லை !

அழைத்து வந்தவனும்
இடையில் விட்டு
சென்றான் !
அழைத்து போகிறவனும்
எங்கோ கூட்டி
செல்கிறான் !

நடந்ததை கேட்டால்
விதி என்கிறார்கள் !
நடப்பதை கேட்டாலும்
விதி என்கிறார்கள் !
நடக்க போவதைக்
கேட்டால்
அதிகபிரசங்கி என்கிறார்கள் !

வந்த வழியும்
அறியாது
போகும் பாதையும்
அறியாது
நடுவில் நடப்பதும்
தெரியாது
இருப்பது தான்
வாழ்க்கையா !

அழைத்து வந்தவனும்
விட்டு செல்வதும்
புதிதாய் வந்தவனும்
விட்டு செல்வதும் தான்
விதியா !

எல்லாம் நீங்கி
செல்கிறது !
பிறகு எதுதான்
நிரந்தரம் !

எழுதியவர் : புகழ்விழி (25-Jun-16, 1:22 am)
Tanglish : ethu nirantharam
பார்வை : 210

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே