அறிந்தவன் யார்
பெண்ணே!
பட்டாடை கொண்டு
உன்னெழிலை இன்று
மூடிமறைத்தது யார்?
அங்கத்தை தூய தங்கத்தை
மூடி மறைக்காதிருந்தால்
உன்னை யார் மதிப்பார்?
தேவை என்றால்
தேவதை என்பார்!
அழகை இரசிப்பவன் கவிஞன்
மனதை புரிந்தவன் காதலன்
உடலை காண்பவன் கணவன்
பெண்ணை புரிந்தவன் எவன்?
கவிஞன் போற்றுவான்
காதலன் ஏமாற்றுவான்
கணவன் தூற்றுவான்
அண்ணன் பாதுகாப்பான்
உண்மையான காதலன் என்றால்
உனக்கே கணவனாவான்!