காலமெல்லாம்
கண் இமைக்க மறந்துவிட்டேன்
என்றால்
சுவாசம் இழந்து, உணர்வு மரத்து,
உயிர் துறந்துவிட்டேன்
என்றே கொள்.
என் இறப்பு நடந்துவிடினும்
உன் இருப்பு குறித்து உளம்கனிந்து
அகம் மகிழவேசெய்வேன்.
கார்மேகத்தினுள் மழையல்ல நான்
மேகக்கூட்டங்கள் உறங்கும் மெத்தையாம்
நிறைவான நீலவான நிரந்தரம்.
நிலமாய் நீ எனில் நீலவானமாய் நான்
எனக்குள்ளேயே எப்போதும் நீ,
இன்பஊற்றை எனக்குள் சுரந்துகொண்டே
பரப்பிக்கொண்டே காலமெல்லாம்.