நீலாம்பரிக்கு•••
எட்டாம் வகுப்புக்கு மாணவ, மாணவிகளுக்கு இன்று நீங்கள் எழுதிய முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவங்க யாரு, தேர்ச்சி பெறாதவங்க யார் யாருன்னு சொல்லப்போறேன் அதுவரைக்கும் அமைதியாக அவுங்க, அவுங்க கடவுள்கிட்ட வேண்டிக்கங்கோ•••!
டீச்சர்••• எங்க இரண்டு பேரோட பேர சொல்லவே இல்லீங்களே•••!
நீங்க இரண்டு பேரும் தலைமை ஆசிரியரை போய்ப் பாருங்க•••!
சரிங்க டீச்சர்•••!
வாங்க வாங்க உக்காருங்க, ஆமாம் உங்க இரண்டு பேர் பேப்பரும் ஒரேமாதிரி கையெழுத்தா இருக்கு, மதிப்பெண் கூட ஒன்னுபோல இருக்கே அதெப்படி••?
••••••••••••!
இப்படி அமைதியா இருந்தா எப்படி ஏதாவது காரணம் இருக்குமில்ல அதச் சொல்லுங்க•••!
•••••••••••••!
இப்படி ஒன்னும் பேசாம இருந்தா அவுங்கவுங்க பெத்தவங்கள கூப்பிட வேண்டி இருக்கும்•••!
டீச்சர்•••!
சொல்லு சொல்லு••••!
டீச்சர் நாங்க இரண்டு பேரும் பக்கத்து பக்கத்தில இருக்கோம்•••!
நீலாம்பரியோட அம்மா காலமாயிட்ட பிறகு அதாவது சரியா ஆறு மாசம் கூட ஆகாதபோதே ஒரு பசுவை கன்னுகுட்டியோட ஓட்டிக்கிட்டு வந்து வச்சிக்கிட்டாரு இவளோட அப்பா•••!
ஒன்னும் புரியலயே அதாவது இரண்டாவது பொண்டாட்டி அப்படித்தானே•••அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்••!
சொல்றேன் டீச்சர் அவுங்க நீலாம்பரிக்கு கொடுக்கிற கொடுமையால என் படிப்பும் தடைபட்டது, அவள படிக்கவே விடுறதில்ல, அவள தூங்கக்கூட விடுறதில்ல அவுங்க வீட்டுல போடுற கூச்சலால என் தூக்கமும் கெடும்•••!
நீலாம்பரியோட அப்பா இதையெல்லாம் கண்டுக்கிறதில்லையா!
அவரு இருந்தாதானே பக்கத்து ஊர்ல ஒரு கம்பனியில வாட்சிமேனா வேல பாக்குறாரு அதனால ராத்திரியில வீட்ல இருக்க மாட்டாரு, வேலை முடிஞ்சி வீட்டுக்குவந்தா சாராயத்த குடிச்சிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கிடுவாரு••!
அதனால•••!
அதனால நீலாம்பரி படிக்கவே இல்லை அப்பறம் எப்படி தேர்வு எழுத முடியும், பாஸ் பண்ண முடியும்•••!
ஆமாம் அவளுக்காக நீ ஏன் இவ்வளவும் செய்யனும்••!
டீச்சர் நீலாம்பரியோட அம்மா நீலாம்பரிக்கு அம்மாதான் ஆனா எனக்கு அவுங்க தெய்வம்•••!
எப்படி••••!
டீச்சர் என்னை ஒரு தடவை விஷத்தேள் கொட்டிடுச்சி, வீட்டில் யாரும் இல்ல நான் வலிதாங்க முடியாம துடிச்சிக்கிட்டு இருந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் ஓடிவந்து நான் மயங்கி கிடந்ததை பார்த்து அவுங்க தோளில் தூக்கி போட்டுக்கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து உதவி பண்ணினாங்க••!
ஓ•••••!
அதனால அவுங்க மகளுக்கு என்னாலான உதவி பண்ண நெனைச்சேன் இந்த தப்பை பண்ணிட்டு உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்•••!
சரி சரி நீங்கள் ரண்டுபேரும் போய் உக்காருங்க•••!
டீச்சர் தயவு செய்து என்னை வேணும்னா பெய்லாக்கிடுங்க அதுக்காக எங்கள பெத்தவங்களுக்கு இது தெறிஞ்சா
எங்கள சாவடியா அடிச்சிடுவாங்க டீச்சர் !
சரி சரி ••••!
டீச்சருங்க எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க !
பசங்களா இங்கே வாங்க உங்க ரண்டு பேரையும் பாஸ் பண்ண முடிவெடுத்தோம் இனி இந்தமாதிரி தப்பெல்லாம் பண்ணக்கூடாது நீங்களும் இதை யாருகிட்டேயும்
பேசாதீங்க•••!
இரண்டுபேரும் டீச்சருங்க காலில் விழுந்து கும்பிட்டார்கள்••!
அந்த பள்ளியில் எட்டாவது முடிச்சி ஒன்பதாவதுக்கு வேறு பள்ளிக்கு போக வேண்டிய கட்டாயம் அதற்கு பக்கத்து ஊருக்கு அரசினர் பள்ளிக்கு போனோம் பன்னிரண்டாவதுவரை முடிக்க ஓரு மகராசன் கிறிஸ்துவ சாமியார் ஓருவர் நாங்கள் படிக்க உதவினார் அதோடு பட்டப்படிப்பிற்கும் உதவினார் நாங்கள் வேலையை பிடித்தோம் அந்த தெய்வமகன் புண்ணியத்தில் சுகமாக இருந்தோம்
நீலாம்பரி ஒரு விபத்தில் சிக்கி மரணத்தை எய்துவிட்டாள்.