நான் என்ன செய்ய
ஊர் கூடித் தேரிழுத்தும் ஊர் வந்து சேராத்
தேரைப் போன்று வீதியிலேயே நின்றேனே
நான் என்ன செய்ய...
கடல் மீது படகொன்று கரை சேர முடியாமல்
கடலுக்குள் மூழ்குவதைப் போன்று
கண்ணீருக்குள் மூழ்கடித்தாளே
நான் என்ன செய்ய...
மணல் கோட்டை கட்டி வைத்து
மதி மயங்கி நின்றிருந்தேன்
மணவாழ்வை எண்ணியெண்ணி
அலை வந்து அடிப்பதைப் போன்று
மனதுடைத்துப் போனாளே
நான் என்ன செய்ய...