மக்கள் ஜனநாயக மொழிக்கொள்கை மொழிவெறி அல்ல மொழி உணர்வு

மக்கள் ஜனநாயக மொழிக்கொள்கை .. மொழிவெறி அல்ல... மொழி உணர்வு!
-----------------------------------------------------------
ஒரு மொழியியல் மாணவன் என்ற முறையிலும் மக்கள் ஜனநாயகக்கொள்கையை விரும்புகிறவன் என்ற வகையிலும் நான் எந்த ஒரு
மொழிக்கும் எதிரானவன் இல்லை. எல்லா மொழிகளும் மனிதசமுதாயத்தின் - மனிதமூளையின் - படைப்புத்தான். அவை
மக்களால்தான் தான் பேசப்படுகின்றன. ஒரு மொழியைத் தரக்குறைவாகக் கருதுவது என்பது அந்த மொழி பேசும் மக்களைத்
தரக்குறைவாகப் பார்ப்பதாகும் என்பது எனது கொள்கை. எனவே ஆங்கிலமோ, இந்தியோ, சமசுகிருதமோ - எந்தமொழியாக
இருந்தாலும் அதை நான் மதிக்கிறேன். ஆனால்.... எனது தாய்மொழியின்மீது வேறொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை
ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தனது தாய்மொழியின்மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை
ஏற்றுக்கொள்ளக்கூடாது. தாய்மொழியில் ஒருவர் தனது அத்தனை மொழிச்செயற்பாட்டுத் தேவைகளையும்
நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் வசதியும் வேண்டும். இதுவே மக்கள் ஜனநாயக அடிப்படையிலான ஒரு
மொழிக்கொள்கையாக இருக்கமுடியும்.
நன்றி: முகநூலில்: தெய்வ சுந்தரம் நயினார்