ஜென்மசரித்திரம் பாகம் 2
![](https://eluthu.com/images/loading.gif)
முதல் நாள் கல்லூரி தொடங்கியது.வி்க்ரம் ராஜாவை அழைத்துக் கொண்டு அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் விட்டு உற்சாகத்துடன் புறப்பட்டான்.அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயனித்தனர்.
காற்று சில்லென்று வீசியது.........................விக்ரமின் எண்ண அலைகள் காற்றில் மிதந்தது.அந்த கற்பனை நாயகி அவன் நினைவில் சூடிக் கொண்டாள்.அவனும் அவளோடு கனவு லோகத்தில் கரைந்தான்.அந்த சமயத்தில் ராஜா அவனிடம் பேசிய எந்த வார்த்தைகளும் அவன் காதில் நுழையவில்லை.
சற்று நேரத்தில் ராஜா, "ஏன்டா நான் பேசிகிட்டே வரேன் நீ எதுவுமே பேசமாட்ர....................காதுல விழுதா இல்லையா...................சரி இறங்கு காலேஜ் வந்துடுச்சு....................." என்றான்.விக்ரமும் நினைவிக்கு வந்தபடி வண்டியை விட்டு கீழே இறங்கினான்.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அதே சமயத்தில் ராகினி தன் அன்னையிடமும் தந்தையிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.முதல் நாள் என்பதால் சற்று உற்சாகமாகவே தென்பட்டாள்.கல்லூரி பேருந்தும் வந்தது.அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவளுக்கு புதிதாகவே இருந்தனர்.இருந்தும் அங்கு காலியாக இருந்தனர் இடத்தில் அமர்ந்தாள்.சற்று தூர பயணத்தில் அவள் அருகே ஒரு பெண் அமர்ந்தாள்.அவள் பெயர் கவிதா. இன்னும் சற்று தூர பயணத்தில் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.அவளும் ராகினி எடுத்திருந்த கணினி பிரிவே எடுத்திருந்தாள்.ஒருவழியாக கல்லூரி வந்து சேர்ந்தனர்.
அந்த கொஞ்ச நேரத்திலேயே இருவரும் தோழமைக் கொண்டனர்.கல்லூரி சென்றவுடன் அங்கு பார்க்கும் இடமெங்கும் மாணவர் பட்டாளமே தென்பட்டது.கண்ணை பறிக்கும் அழகிய வயல்வெளிக்கு நடுவில் அமைந்த ஓர் கல்லூரி.அந்த அமைவிடத்தைக் கண்டு ராகினி மெய் மறந்து போனாள்.ஏனெனில் இயற்கை வளங்களை ரசிப்பதில் ராகினிக்கு எல்லையற்ற ஆனந்தம்.சற்று நேரத்தில் மணியோசை கேட்டபின் மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக நடக்க தொடங்கினர்.ராகினியும் கவிதாவும் தங்களது பிரிவை தேடி அலைந்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் பரபரப்பாக அலைந்துக்கொண்டிருந்த சமயத்தில் தீடீரென யாரோ ஒருவர் மீது மோதி தடு்க்கி விழுந்தாள்.கீழே விழுந்தவுடன் திடுக்கிட்டு யார் மீது மோதினோமென சற்று மேல்நோக்கி பார்த்தாள்.அழகிய கலை பொருந்திய முகம்.பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் புன்னகை.சகல ஐஸ்வர்யமும் பொருந்திய அந்த முகத்தை கண்டவுடன் ராகினி தனக்கு ஏற்பட்ட வலிகள் அனைத்தையும் மறந்தாள்.பார்த்த வேகத்தில் ராகினி தாங்கள் யாரென கேட்டாள்.அந்த உருவமானது தன்னை மலர்விழி என அறிமுகம் படுத்திக் கொண்டது.மலர்விழி ராகினியிடம் தானும் கணினி பிரிவை தேடிதான் அலைந்துக் கொண்டிருப்பதாக கூறினாள்.மலர்விழியின் பேச்சும் புன்னகையும் ராகினியை ஈர்த்தது.அவளோடு நெடு நாள் பழகிய உணர்வு ராகினி மனதில் குடிக்கொண்டது.எனவே ராகினி புன்னகையுடன் மலர்விழிக்கு பதிலளித்தாள்.சேர்ந்து தேடுவோமென்று.
எப்படியோ ஒருவழியாக கணினி பிரிவை மூவரும் கண்டுபிடித்து வகுப்பறைக்குள் சென்றனர்.அதே நேரத்தில் விக்ரமும் ராஜாவும வகுப்பறையை தேடிக்கண்டுபிடித்து வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தனர்.விக்ரமின் இயல்பாக பழகும் சுபாவத்தால் கல்லூரிக்கு சென்ற கொஞ்ச நேரத்திலேயே பலருடன் அறிமுகம் கொண்டான்.வகுப்புகள் இயல்பாக நடந்து கொண்டிருந்தது.நூற்றிஐம்பது மாணவர்களை கொண்ட வகுப்பறை என்பதால் ஆசிரியர்களுக்கு மாணவர்களோடு உறையாட சற்று அரிதாகவே இருந்தது.
மதியநேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் சாப்பிட்ட களைப்பில் அமர்ந்திருந்தனர்.அந்த சமயத்தில் கடைசி பகுதி நேரத்திற்கு வந்த ஆசிரியரொருவர் மாணவர்களை முன்னே வந்து ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.மாணவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.நூற்றிஐம்பது நபர்களும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்று மலைத்தான் விக்ரம்.உடனே ராஜா,"விடிஞ்சிடும் மச்சான்.....................எல்லாரும் சொல்லி முடிக்கிறத்துக்குள்ள.........................." என்று நகைத்தான்.
அந்த சமயத்தில் ராகினியின் முறை வந்தது.அவளும் முன் நின்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.அவ்வளவு நேரம் அலட்சியமாக இருந்த விக்ரம் ராகினியைக் கண்டவுடன் திகைத்தான்.அந்த சமயம் அவனுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது போல் இருந்தது.ராகினியின் முகமும் அவன் சிறுவயதில் கண்ட அவன் வீட்டு இருட்டறையில் இருக்கும் படமும் தினமும் அவன் கனவில் கண்டு நாளும கரைந்த தன் கற்பனை நாயகியின் முகமும் ஒன்றாக இருப்பதைப் போல் உணர்ந்தான்.
பார்த்த கனம் அவனுக்கு திகிலாக இருந்தாலும்.......................தான் நெடுநாளாக நினைத்த ஒன்று நிறைவேறியதை எண்ணி மகிழ்ந்தான்.அதாவது அந்த கற்பனை நாயகியை தன் வாழ்நாளில் ஒருமுறையாவது காணவேண்டும் என்ற ஆசையை எண்ணி மகிழ்ந்தான்.இருந்தும் அவன் அடிமனதில் இது எப்படி சாத்தியமாகும் என்ற எண்ணமும் தோன்றியது.அவள் யாரென்ற எண்ணமும் அவளைப் பறஹறி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமும் அவனித்தில் தோன்றியது.
அது ஒருபக்கம் இருந்தாலும் அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணமும் உதித்தது.ஆகவே அவள் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தி கொள்ளும்போது அதிக ஆர்வத்துடன் கவனித்தான்.அன்று வீட்டிற்கு போவதற்குள் அவளிடம் பேசிவிட வேண்டுமென்று எண்ணினான்.ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. வருத்தத்துடன் வீடு திரும்பினான்.விட்டுக் சென்றவுடன் கட்டிலில் படுத்தவன் அவளை நினைத்துக் கொண்டே விட்டத்தை பார்த்து கனவு காண தொடங்கினான்.
தொடரும்..................