நட்பை காதல் செய்கிறேன் தோழி உன் நினைவில்
உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஜடம் -(நான்)
உன் நட்பின் அறிமுகத்தாலே என்னையே காதல் செய்தேன் .....(தோழி).
உன் தோளில் ஆறுதல் காதல் கண்டேன் .........
உன் மடியில் என் துன்பங்களை தொலைத்தேன் ......
காதலர் இடம் இல்லாத காதலை செய்தேன் நம் நட்பை........
உன் கைகளை கோர்த்து வெட்டி கதை பேசுவதை காதல் செய்தேன் .......
நீயும் நானும் உணவுக்கு அடித்துக்கொள்வதை காதல் செய்தேன் ................
எனக்கு கவலை என்றால் உன் கண்கள் கலங்குவதை காதல் செய்தேன் ........
என்றும் நீயும் நானுமே இருக்கும் ஒற்றுமையை காதல் செய்தேன்.......
விதியால் பிரிந்தாலும் என் மனதை மழை நீராய்.......................
நனைக்கும் உன் நினைவை இன்னும் காதல் செய்கிறேன் தோழி...........
நீ திருப்ப வருவாய் என !!!
நம் பழைய நட்புடன் ....................