சிக்கு கோலம்

சிக்கிய புள்ளியும்
சொக்கிட சொல்லும்...
சிக்கலின் வனப்பும்
சிற்பமாய் மினுக்கும்..!

பொறுமையின் அருமை..!
முழுமையின் பெருமை..!
திறமையின் புதுமை..!
பரப்பிடும் இப்பதுமை..!

கைகள் இடும் கோலம்..!
காலம் போடும் கோலம்..!
ஞாலம் தேடும் ஜாலம்..!
இயல்பிலே ஒன்று யாவும்...

துவக்கம் குழப்பும்..,
தொடர்ச்சி கலக்கும்...
சாந்தமாய் தொடர்ந்தால்
அந்தமோ அதிசயமாய்..!

எழுதியவர் : அஞ்சா அரிமா (28-Jun-16, 11:02 pm)
பார்வை : 248

மேலே