கண் எனும் கொடுவாள்
நேருக்கு நேர் நின்று
ஈட்டிதனைக் கொண்டு
தாக்கியிருந்தால் கூட
என் இதயத்திற்கு
ஒன்றும் ஆகியிருக்காது!
ஐயகோ!
இவள் தன் கூர் விழி கொண்டு
என்னை குத்திக் கொன்று
வந்து போறாளே மின்னலாய் இன்று!
விழுங்கிடத்தான் போகுதடி
உன் விழிதான் என்னை
காதலை உற்பத்தி செய்வது
கண்கள் தானே!
செவ்வாய் சொற்களுக்கு பயனில்லை
தினம் ஜாடை பேசும்
உன் விழிக்கு முன்னே!
முத்தமிழும் நானும்
வியந்துதான் போனோம்!
என்னருகே நீயிருந்தால்
வெண் நிலவும் நாணும்!
கண் எனும் கொடுவாள் கொண்டு
இழுத்து ஒடிக்கிறாள் இளம் நெஞ்சை!
பற்றத்தான் வைக்கிறாள்
காற்றில் மிதக்கும் இளவம் பஞ்சை!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
