விடுதலை இல்லாத விரக்தி

அவ்வப்பொழுது ஆறுதலுக்காக
நம்பிக்கையின் பேரில்
நாட்கள் நகர்ந்தாலும் ..........

இடைவிடாத துன்பங்களின்
இடையிடையே அமைதியான சூழல்களில் -
அவமான அவஸ்தைகளின் ஆக்கிரமிப்புகளில் .................

அவதாரமாய் அகோரமாய்
ஆட்டம் போடும் விரக்தி .............

எல்லாவற்றிற்கும் தீர்வு
என்றோ கிடைக்கும் என்றிருந்தும்
மனதின் அவசரத்தில்
மரணம் கூட மலிவானதாய் .................

இறுதிக்கும் விடுதலை இல்லாமல் விரக்தி !

எழுதியவர் : விநாயகமுருகன் (2-Jul-16, 8:11 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 65

மேலே