தெய்வம் இல்லையென்றால் தந்தை யார் அடா
தெய்வம் இல்லையென்றால்
தந்தை யார் அடா
தினம் தேடும் உள்ளம் யார் என்றால்
தந்தை தான் அடா
வீரம் அது உன்னில் முளைக்க
அவன் சொல் தான் அடா
சோகம் அது உன்னை துளைக்க
கை கோர்பான் அவன் தான் அடா
கண்ணில் ஈரம் அதை விளைத்த
பிரம்மன் அவன் தான் அடா
தெய்வம் இல்லையென்றால்
தந்தை யார் அடா
தினம் தேடும் உள்ளம் யார் என்றால்
தந்தை தான் அடா
தீ கங்கு உள்ளுண்டு
சுடுநீராய் முகம் கொண்டு
குளிர் அறியா உஷ்ணமாய் தொட்டாய்
சுடுபவன் நீ என்று தூரம் போனேன்
சுட்டுப்பவன் நீயே அறிந்தேன்
நான் தந்தை ஆனா பின்பே
உணர்ந்தேன் என் தந்தை அன்பே
வலிக்காமல் வடிக்கும் சிற்பியும் அவன்
சிலையை செதுக்கும் சாமியும் அவன்
கள் கொண்ட ஈரமாய்
வில் கொண்ட வீரமாய்
நெஞ்சில் விளைந்த காவலன் அவன்
தெய்வம் இல்லையென்றால் தந்தை யார் அடா
தினம் தேடும் உள்ளம் யார் என்றால் தந்தை தான் அடா
கண்ணீர் அது உன் கண்கள் கண்டது இல்லை
கலக்கம் அது உன் வாழ்வில் கொண்டது இல்லை
நடுக்கம் அது இல்லா வாழ
நீ சொன்னது அறிந்தது இந்த பிள்ளை
தினம் தெரியாமல் ரசிக்கையில்
நான் தவிக்காமல் தோள் கொடுக்கையில்
விடியாமல் போர் தொடுக்க
வாழ் போர்களத்தில் வெற்றி வாள் கொண்ட மன்னவனே
தெய்வம் இல்லையென்றால்
தந்தை யார் அடா
தினம் தேடும் உள்ளம் யார் என்றால்
தந்தை தான் அடா