விடுமுறை

இதோ இங்கதான் நீ பிறந்த!
சன்னங்களால் சல்லடையாக்கப்பட்ட
குட்டி சுவர் ஒன்றும் !
பற்றைகாடுகளுக்கிடையே!
பராமரிப்பற்ற பாளும்கிணறுமாய்
அம்மா காட்டிய நான் பிறந்த வீடு !
எனது தேசம் !
எனது தாய்நிலம்!
நான் சுவாசித்த முதல் காற்று !
நான் பதித்த முதல் கால்தடம்!
உண்டு !உறங்கி !
விழுந்து ! எழுந்து!
சிரித்து! அழுது!
சன்டைபோட்டு !
விளையாடி!
அத்தனைக்குமான முதற் புள்ளி
இங்கிருந்துதானே தொடங்கியிருக்கும்!
உள்ளே ஏதென்று அறியா
உணர்வொன்று உசுப்பிவிடுகிறது தாய்மண்ணின் பற்றை!
புலம்பெயர் தேசத்தின் ஒளிநிறைந்த நிகழ்காலங்களால் கூட மழுங்கடிக்கப்பட்டுவிடாமல் பத்திரப்படுத்தப்பட்டு கிடக்கிறது
புதர்களுக்கு நடுவே புதைக்கப்பட்டிருக்கும் எங்கள் தேசத்தின் இறந்த கால அழகியல்!காணாமல் போன
பக்கத்து தெரு கடைக்கார அண்ணனும் !செல்லடியில் சிதறிப்போன
மங்கையக்கா குடும்பமும் !
ஆமி சுட்டதில கடைக்குட்டி தம்பி சாக
இயக்கத்தில சேர்ந்து வீர மரணமான கலைவாணியும்என
அம்மா சொல்ல சொல்ல
கண்முன் வந்துபோன ஆயிரம் சொந்தங்களின் அல்லல் பட்ட வாழ்க்கையும்
பயணம் முடிந்த பின்னும் முடியாமல் நெருட...
என் தேசத்தின் எல்லைகளெங்கும்
ரணம் நிறைந்த கடந்த கால
வடுக்களாகவே தெரிகிறது....
காலில்லாதா ஜோசப் அண்ணனின் நலம் விசாரிப்பில் யுத்தம் விட்டு வைத்த துக்கம் ஒட்டிக்கிடக்கிறது இன்னும்...
வடக்கின் எல்லைகள் யுத்ததின் தளும்புகளாகவும்
மேற்கின் எல்லைகளில் கேளிக்கைகளின் சொர்க்க புரிகளாகவும்
ஒரே தேசத்தில் இரண்டு வேறுபட்ட துருவங்கள்....
ஐரோப்பா வாழ் தமிழச்சியின் சொந்த மண் நோக்கிய பயணம் !
விடுமுறை களிப்பை விடவும்
மண் மீட்பிற்கான அவசியத்தையே அதிகம் அளுத்தி பதிய வைத்திருக்க வேண்டும்!

எழுதியவர் : shanju (6-Jul-16, 3:59 am)
Tanglish : vidumurai
பார்வை : 67

மேலே