எதிர்நீச்சல்

வாழ்க்கையின் முதல் புள்ளி எதிர் நீச்சலிலே ஆரம்பமாகும்..
அடுத்தடுத்த புள்ளிகள் தொடும் வேளை
வாழ்க்கை என்பது நதியோடு போகும் இலையாக அல்ல‌
இலை மீது போகும் எறும்பாகவே இருக்கும் என்பதை
நமக்கு கற்றுக்கொடுக்கும்...
முட்களும் அனலும் செல்லும் வழியெங்கும்
வரவேற்க காத்திருக்கும்..
நீர் தேட பாலை அருகிருக்கும்
நிலம் தேட கடலே காட்சிதரும்
வான் தேட இருளே சூழ்ந்துகொள்ளும்
காற்று வேண்ட வெப்பம் மட்டுமே கைகொடுக்கும்
ஜெயிக்க வேண்டுமெனில் நெஞ்சுரம் கொள்வோம்
வரும் சூறாவளியை நம் மனதால் அமைதி படுத்துவோம்
மலை குறுக்கிட்டால் முட்டித்தள்ளுவோம்
இடி விழுந்தாலும் அதனைக் கடத்தும் தாங்கியாவோம்
அடி கொடுக்க நினைக்கும் வாழ்க்கைக்கு
நம் புன்னகையால் புத்தி சொல்வோம்
எதிர்த்து எதிர்த்து போனால் தான் சிகரமும் சிறு குன்றாகும்
முட்டி மோதி எழுந்தால் தான் சிறு விதையும் பெரும்தோப்பாகும்
லட்சியம் நோக்கி பயணிக்கும் போது நெருப்பாய் இருப்போம்
வழியில் தடுக்கும் காரணிகளை பொசுக்கிடுவோம்
பாறாங்கல்லே வந்திட்டாலும் நம் சுண்டிவிரலால் நசுக்கிடுவோம்
எதிர்த்துச் சென்றே லட்சியம் தொடுவோம்
எதிர் நீச்சலடித்தே லட்சியம் அடைவோம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Jul-16, 12:41 pm)
பார்வை : 717

மேலே