நீ போதும் கண்ணே

தங்கத் தோடு வேண்டாம்
என் தங்கத்தோடு வாழ்ந்தால் போதும்....
வைரக்கல்லு மூக்குத்தி வேண்டாம்
உன் வைரப்புன்னகை ஒன்று மட்டும் போதும்...
உதட்டுச்சாயம் நீ பூச வேண்டாம்...
உன் உதடு மொழியும் ஒரு சொல் போதும்..
முத்து மணி நீ அணிய வேண்டாம்...
என் முத்தே நீ ஒன்றே போதும்..
கல்லு வச்ச ஒட்டியானம் வேண்டாம்
என்னோடு என்றும் ஒட்டிக் கொண்டிரு அது போதும்...
உன் கையில் குலுங்கும் வளையல்கள் வேண்டாம்...
என் கையைப் பிடித்திரு அதுவே போதும்..
மோதிரம் பல நீ அணிய வேண்டாம்...
என் பத்து விரல் தனை கோது அது போதும்....
வெள்ளி கொலுசு தான் வேண்டாம் ..
எங்கே போனாலும் சொல்லி விட்டுப்போ அது போதும்....
விலைமதிக்க முடியாத செல்வங்கள் எதும் வேண்டாம் பெண்ணே...
என் விலையுயர்ந்த. செல்வம் நீ போதும் கண்ணே....

எழுதியவர் : கிரிஜா.தி (8-Jul-16, 10:21 am)
Tanglish : nee pothum kanne
பார்வை : 374

மேலே