சிந்தித்த காதல்

பார்த்தோம்

சிரித்தோம்

சந்தித்தோம்

பேசினோம்

அறிந்தோம்

உணர்ந்தோம்

உள்ளத்தால்

உணர்வால்

உடல் உறவு ஏதுமில்லை

காதல் வந்தது

பெரியவர்கள் சம்மதம் நாடி

முதலில் அதைப் பெற்றோம்

காதலும் வளர்ந்தது

தடை ஏதுமில்லை

தலை கனமும்

யார்க்கும் இல்லை

மனக் கசப்பும் இல்லை

கத்தி இல்லை

ரத்தம் ஏதும்

சிந்த வில்லை

க்ரோதம் இல்லை

ஆக்கிரோஷம் இல்லை

எங்கள் திருமணம்

காதல் திருமணம்

இனிதே முடிந்தது

-----------------------------------------------

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jul-16, 4:54 pm)
Tanglish : sinthitha kaadhal
பார்வை : 81

மேலே