தர்மம் பிழைக்காது•••

இன்னொருவர் சுமையை
தான் சுமந்து பார்த்தால்
ஞானம் பிறக்கலாம்!

தன்னுடைய சுமையை
இன்னொருவர் மேல் சுமத்தும் தானே விழுந்திடலாம் !

ஞானம் பிறந்தவர்கள்
எத்தனைப் பேர் அது
நானில்லை நீயே !

தானே விழுந்தவர்கள்
எத்தனைப் பேர் அது
நீயில்லை நானே யென

ஏற்பவர் இருந்து விட்டால்
கத்தியும் இருக்காது துளி
ரத்தமும் சிந்தாது !

நாடே என் வீடென
வீடே என் நாடென
கொண்டுவிட்டால் ஒரு
ஊழலும் பிறக்காது சிறு
துரும்பையும் இழக்காது !

இந்த நாட்டையே காடாய்
காட்டையும் பணமாய்
ஆக்கிக்கொண்டால் அங்கே
தர்மம் பிழைக்காது !

அடிமேலடியடிக்க
அம்மியே நகர்ந்தாலும்
லஞ்சம் லாவண்யம்
இம்மியும் நகராது !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (9-Jul-16, 10:37 pm)
பார்வை : 81

மேலே