செங்கை சீற்றம்
காட்டு காகரூடிகளுக்கு
காக்கிச்சட்டை மாட்டிவிட்டதா காவல்துறை..?
லத்தி சுயற்றதானே உரிமை கொடுத்தது சட்டம்
எட்டி உதைக்க உரிமை கொடுக்கலையே சட்டம்
மன்னிப்புக்கேட்டு காலில் விழுந்த அப்பாவிகளை….
ஈவூஇரக்கமற்று அடித்து துவைத்தீர்களே அடபாவிகளே!
“மன்னிப்பு கேட்பவன் மனுஷன்
மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்”
சினிமாவில் மட்டும்தான் இது சாத்தியமா…!
நிஜவாழ்வில் நடப்பதில்லையே சத்தியமா,,!
அய்யோ அம்மா என்று ஈரகுலை நடுங்க
அபயக் குரல் எழுப்பினாளே அந்த அபலை
அவள் அலரல் உங்கள் கொடூர காதுகளுக்கு
நிஜமாகவே கேட்கவில்லையா நயவஞ்சக காக்கிகளே
சாமான்யர்கள் என்பதால்தானே சகட்டுமேனிக்கு
நைய்யப்புடைந்தீர்கள்….! - அவர்கள்
அம்பானிகளாக இருந்திருந்தால் இந்நேரம் ரத்தன
-கம்பளமல்லாவா விரித்திருப்பீர்கள்…!
பணி இடமாற்றம் மட்டும் போதுமா – அவர்களின்
மினியை பிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டாமா
காவல் துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரே..!
கருணை காட்டுங்கள் அந்த அப்பாவிகளுக்கு நஷ்ட்ட ஈடுகளின் மூலமாக..!
காட்டமான கண்டனத்தைக் காட்டுங்கள் மூன்று காவலர்களின்
மூர்க்க தனத்திற்காக.!
இலங்கை தமிழர்களுக்காக சிங்களவர்களுக்கெதிராக
இடைவிடாமல் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறோம்
இங்கே செங்கை தமிழர்களுக்காக காவலர்களுக்கெதிராக
ஒட்டுமொத்த தமிழகமும் குரல்கொடுப்போம் வாருங்கள்..!
ஆளும்கட்சியின் ஆதரவு இருக்கிறதென்று ஆட்டம் போடாதீர்கள்
நாளை அது எதிர்கட்சி ஆகும்போது, உங்கள் காக்கிகள்மீது
காக்காக்கள் அமர்ந்து கக்கா போனாலும் சட்டைசெய்ய ஆளிருக்காது..
வினை விளைத்தவன் வினை அறுப்பான்
இன்று நீங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்
ஆனால் நாளை சட்டத்தின் முன்பு நிறுத்தப்படும்போது
வெட்கி தலைகுனிந்தாலும் சட்டம் உங்களை காப்பாற்றாது
வினையை விதைத்துவிட்டு நீங்கள் சென்றுவிட்டீர்கள் – ஆனால்
நீங்கள் நடந்துகொண்ட அத்துமீறிய அபத்தங்களால் அதிகமாக
பாதிக்கப்படுவதென்னவோ மனிதாபிமானம் மிக்க போலீஸ்காரர்களே
ஏனெனில் தமிழக மக்களின் தவறான கண்ணோட்டம் காவல்துறைமீது
எப்போதும் உண்டு ! அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக
ஆகிவிட்டது அந்த வேண்டத்தகாத செங்கை சம்பவம்.
*****************************************************************************************
சாய்மாறன்
12/6/16 12:36pm