மா துறை
மண் மணக்கும் ஊரு
மா துறையினு பேறு
தமிழ் பண்மணக்கும் கேளு
தடுக்கி விழுந்தா சோறு
நெல் மணக்கும் சோலை
நீண்ட நெடிய காதை
விடிய விடிய விளக்கெரியும்
வீதியெல்லாம் தமிழ் ஒளிரும்
வீரம்மணக்கும் வீரபாண்டிய மண்ணு
வீம்புக்குவந்தா ஆத்துக்குள்ளகிடக்கும் கண்ணு
பாசம்மனக்கும் பண்புள்ள பூமி
பழக்க வழக்கத்துக்கு உயிரை கொடுக்கும் சாமி
கலைனயம்மனக்கும் கடம்பவன கோவில்
களையெரு மல்லுக்கட்டு நடக்கும் தெருவில்
வண்டல்மண் மணக்கும் வைகை கரையிலே
வாழ்வதே வரலாறு தான் நினைக்கியிலே