பிர - சவம்

பிர சவம்

மகிழ்ச்சி
மறு பிறவி எடுக்க
பாவலர் ஏழையின் சிரிப்பை
பரிந்துரை செய்யவே ,

ஆனந்தக் கண்ணீர்
புன் முறுவல் பூண்டு
தெய்வமே !
உன்னை நான் அறியேன்
வேண்டியதை கேட்கும் முன்
அருளுகிறாய் ........

ஆனால்
உன் பெயரை சுமந்து கொண்டு
உன் அங்கமாக விளங்கும்
சிவாத்மாக்களை.....................

ஐ நான்கு ஆண்டு காலமாய்
அரசியல் சவக்கிடங்கிற்கு
எரி பொருளாய் இருக்க
எழுதிக்கொடுத்த பரிந்துரையை
மீட்க வேண்டும் ஒரு முறை
சன நாயகம்
சுகமாய் பிரசவிக்க !

எழுதியவர் : தருமராசு (12-Jul-16, 9:24 pm)
பார்வை : 122

மேலே