உண்ணா நோம்பும் மௌன விரதமும்

தினம் தினம்

மூன்று வேளையும்

வித விதமாய்

உண்ணும் நாம்

வாரம் ஒரு முறை

மாதம் ஒரு முறை என்று

உண்ணா நோம்பிருந்தால்

உடலும் உள்ளமும்

நலம் பல பெறுமே

என்பதை நன்கறிந்தும்

நம்மில் பலர் இதை

பேணாதிருப்ப தேனோ ?

வாரத்தில் ஓர் நாள்

ஓய்வு கேட்டு வாங்கும் நாம்

நம் உடலை பேணும்

உறுப்பகளுக்கும் ஓய்வு

தர வேண்டும்

நோம்பு நாளில்

மனதை ஒருநிலைப் படுத்தி

இண்டீரியங்களைக் கட்டுப்படுத்த

உடலாம் மனித இயந்திரம்

செவ்வனே இயங்கிடுமே

இதை அறிந்துதே

நம் முன்னோரும்

ஏகாதசி விரதம் சஷ்டி விரதம்

என்றெல்லாம் பல திதிகளில்

விரதம் இருக்க நல்லதென்றனர்

இன்றைய நவீன மருத்துவர்களும்

உண்ணா விரதம் உடலுக்கும்

உள்ளத்திற்கும் நல்லதென்று கூறுவர்

ஐயா இளைஞர்களே உங்கள்

'கூகுள்' அகராதியும் இதைத்தான் சொல்லும்

சற்றே போட்டுப் பாரும்


மாதம் இருமுறை உண்ணா நோம்பிருங்கள்

முடிந்தால் இந்நாட்களில்

சில மணி நேரங்கள்

மௌனமாய் இருங்கள்

குறையற்ற உடல் பெற்று

அறிய ஆரோக்கியம் பெற்று

நற்செயலிலேயே செல்லும்

மூளைப் பெற்று அதை

நடாத்தும் மனதும் பெறுவீர்

சான்றோர் வாக்கு

என்றும் பொய்யாவதில்லை

அவற்றை மதிப்போம்

வாழ்க்கையில் உயர்வோம்



பிறந்தோரெல்லாம் ஒருநாள்

மறைதலும் உறுதி

இது அந்த படைத்தவன் நியதி

இருக்கும் வரை

நல்லதைக் கேட்டு

நல்லதையே செய்து

எல்லோரும் வாழ்த்த

இனிதே வாழ்ந்து

புகழுடன் மறைவோம்

நல்ல உடம்பு நல்ல மனம்

நல்லொழுக்கம் தருமே

நோம்பிருத்தல் இதற்கு

உறுதுணையாமே

இதை அறிவோம்

வாழ்வோம் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jul-16, 2:29 pm)
பார்வை : 60

மேலே